யாழ்ப்பாணம்,கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்கள் கட்டுநாயக்காவில் கைது
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையிலேயே விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த பெண் 31 வயதுடையவர் எனவும் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெண் 26 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விமானப் போக்குவரத்து அனுமதிக்காக அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் சந்தேகம் அடைந்த கத்தார் ஏர்வேஸ் அதிகாரிகள் இருவரையும் விமான நிலைய குடிவரவு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளிடம் அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.