இலங்கையில் 10, 000 வீடமைப்புத்திட்டத்திற்கான இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கையில் 10, 000 வீடமைப்புத்திட்டத்திற்கான இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கையில் இந்திய வீடமைப்புத்திட்டத்தில் 4வது கட்டத்தின் கீழ் மலையகத்திற்கான மேலும் 10,000 வீடுகள் கட்டும் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கையுடனான மக்கள் நல மேம்பாட்டு ஒத்துழைப்பின் கீழ் இந்தியா அங்கு வீடுகளை கட்டி தருகிறது.

இதன் முதல் 2 கட்டங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 46,000 வீடுகள், 3வது கட்டத்தில் தேயிலைத் தோட்ட பகுதிகளில் 4,000 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.

இதன் 4வது கட்டமாக தேயிலை தோட்ட பகுதிகளில் மேலும் 10,000 வீடுகளை கட்டி கொடுக்கும் 2 ஒப்பந்தங்கள் நேற்று கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையில் 10, 000 வீடமைப்புத்திட்டத்திற்கான இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து! | Contracts Signed For Construction Of 10000 Housesஇந்த வீடுகள் தேசிய வீட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் அரசு பொறியியல் கழகம் (எஸ்இசி) ஆகியவற்றின் மூலம் கட்டி கொடுக்கப்பட உள்ளது.

இந்த வீடுகள் இலங்கையின் 6 மாகாணங்களில் உள்ள 11 மாவட்டங்களில் கட்டித் தரப்பட உள்ளது.

இலங்கை அரசு தரப்பில், மேம்பாட்டு ஒத்துழைப்பு பிரிவின் கவுன்சிலரும் தலைவருமான எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் மற்றும் எஸ்இசி தலைவர் ரத்ன கலுபஹானா ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.