கொழும்பில் 3 பெண்கள் உட்பட 11 பேர் அதிரடியாக கைது.

கொழும்பில் 3 பெண்கள் உட்பட 11 பேர் அதிரடியாக கைது.

கொழும்பு - பேலியாகொட பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 11 பேரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 4 வாள்களையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொழும்பில் 3 பெண்கள் உட்பட 11 பேர் அதிரடியாக கைது | 11 People Including 3 Women Arrested In Colombo கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது 4 வாள்களுடன் 8 சந்தேக நபர்களும், 3 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மற்றும் 26, 46 மற்றும் 47 வயதுடைய பெண் சந்தேக நபர்கள் களனி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொட பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு மேற்படி குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் என பேலியகொட பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர்கள் வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதானவர்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைக்குட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.