இலங்கைக்கு மகிழ்ச்சி தகவல் நீக்கப்படுகிறது தடை...!

இலங்கைக்கு மகிழ்ச்சி தகவல் நீக்கப்படுகிறது தடை...!

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டதன் மூலம் இலங்கைக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடையை நீக்குவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கிரிக்இன்போ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் வகையில் கிரிக்கெட்டில் அரசியல் செல்வாக்கை செலுத்த வேண்டாம் என இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரொஷான் ரணசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்கியமை அரசாங்கம் இனி கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிடாது என்பதற்கான அடையாளமாக அமையும் எனவும் அந்த இணையத்தளத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு மகிழ்ச்சி தகவல் நீக்கப்படுகிறது தடை...! | Possibility To Remove The Cricket Banஇதேவேளை, இடைக்கால கிரிக்கெட் குழுவொன்றை அமைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அடுத்த நீதிமன்ற அமர்வு வரை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மகிழ்ச்சி தகவல் நீக்கப்படுகிறது தடை...! | Possibility To Remove The Cricket Ban