பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது!

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்தவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரியநீலாவணை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை(27) மாலை 43 வயதுடைய போதைப்பொருள் வியாபாரி சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக குற்றத்தடுப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.

அதனை தொடர்ந்து பெரியநீலாவணை காவல் நிலைய பொறுப்பு அதிகாரி ஜே.எஸ். கே. வீரசிங்க தலைமையிலான குழுவினரின் விசேட சுற்றி வளைப்பின் போது சந்தேக நபர் கைதானார்.

பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது! | Person Distributed Ice Drug Students Arrestedகைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து குறித்த போதைப்பொருளை விநியோகித்துள்ளார்.

மேலும், அவர் வசம் இருந்து ஒரு தொகை ஐஸ் போதைப் பொருளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைதானவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினரால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.