மாணவர்களுக்கு டிசெம்பர் முதல் பாதணி வவுச்சர்!

மாணவர்களுக்கு டிசெம்பர் முதல் பாதணி வவுச்சர்!

எதிர்வரும் 4ஆம் திகதி பாதணி வவுச்சர் விநியோகம் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் இன்று (27) தெரிவித்தார்.

அதோடு பாதணி வவுச்சர் விநியோகம் எதிர்வரும் 27ஆம் திகதி நிறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு டிசெம்பர் முதல் பாதணி வவுச்சர்! | Footwear Voucher For Students From Decemberபாதணி வவுச்சர் 740,000 சிறார்களுக்கு வவுச்சர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதற்காக மிகவும் கடினமான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட சபை உறுப்பினர் ஹேஷா விதானகே, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.