வீட்டினுள் நுழைந்த திருடனை நையப்புடைத்த சுகாதார பரிசோதகர்; இருவர் வைத்தியசாலையில்.

வீட்டினுள் நுழைந்த திருடனை நையப்புடைத்த சுகாதார பரிசோதகர்; இருவர் வைத்தியசாலையில்.

வவுனியாவில் வீட்டினுள் நுழைந்து திருட முற்பட்ட நபர் ஒருவரை மடக்கிப்பிடித்து நையப்புடைத்த பின்னர் சுகாதாரபரிசோதகர் திருடடை பொலிசாரிடம் ஒப்படைத்தசம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் வவுனியா தாண்டிக்குளம் சோயாவீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வீட்டினுள் நுழைந்த திருடனை நையப்புடைத்த சுகாதார பரிசோதகர்; இருவர் வைத்தியசாலையில் | Robbery House Nabbed The Thief Who Brokeஇன்று (27) அதிகாலை குறித்த வீட்டிற்குள் திருடன் ஒருவன் நுழையமுற்பட்டதை வீட்டின் உரிமையாளரான சுகாதார பரிசோதகர் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து சுதாகரித்துக்கொண்ட சுகாதாரபரிசோதகரும் அவரது குடும்பத்தினரும், திருடனை மடக்கிப்பிடித்து மரத்துடன் கட்டிவைத்து நையப்புடைத்துள்ளனர்.

அதன் பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதுடன், திருடனை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.   சம்பவத்தில் திருடன் கத்தியால் தாக்கியதில் சுகாதாரபரிசோதகருக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளதுடன், அவரது சகோதரரான ஊடகவியலாளர் ஒருவருக்கும் சிறுகாயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள்  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்டட்டுள்ளனர்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட நபர் மீது நீதிமன்றில் வேறு வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில்   சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.