கொலை வழக்கில் சிறைச்சாலையில் இருந்த நபர்: மர்மமான முறையில் சடலமாக மீட்பு!

கொலை வழக்கில் சிறைச்சாலையில் இருந்த நபர்: மர்மமான முறையில் சடலமாக மீட்பு!

கொலை வழக்கில் சிறைச்சாலையில் இருந்து பிணையில் வந்த நபர் ஒருவரின் சடலம் மர்மமான முறையில் புகையிரத வீதிக்கு அருகில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்  கிளிநொச்சி காவல் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் கடந்த (31.12.2022) ஆம் ஆண்டில் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் காவல்துறையினருக்கு அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இன்று (27) அதிகாலை அந்த சடலத்தை மீட்டுள்ளதுடன்  கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் சேர்ந்த 22 வயதுடைய ஜோன் பிரகாஷ் என்பதையும் அடயாளம் கண்டுள்ளனர்.

கொலை வழக்கில் சிறைச்சாலையில் இருந்த நபர்: மர்மமான முறையில் சடலமாக மீட்பு!(படங்கள்) | Man Who Released Prison Murder Mysteriously Death

இந்நிலையில், குறித்த சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லவுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் கொலையா, தற்கொலையா என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

GalleryGallery