சாய்ந்தமருது வைத்தியசாலையில் உயிரிழந்த நபர்: மரணத்தில் எழுந்த சந்தேகம்!

சாய்ந்தமருது வைத்தியசாலையில் உயிரிழந்த நபர்: மரணத்தில் எழுந்த சந்தேகம்!

சாய்ந்தமருதுவில் சண்டை ஒன்றில் காயங்களுக்கு உள்ளான நபரொருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரணம் தொடர்பில் சந்தேகம் உள்ளதாக மரணித்தவரின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளார்.

சாய்ந்தமருது வைத்தியசாலையில் உயிரிழந்த நபர்: மரணத்தில் எழுந்த சந்தேகம்! | Person Died Sainthamaruthu Hospital Suspicion Died

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 2023.11.23 அன்று 66 வயதுடைய கலந்தர்ஷா ஆதம்பாவா எனும் நபர் தகராறு ஒன்றில் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த முதியவர் அனுமதிக்கப்பட்ட தினத்திலிருந்து வைத்தியசாலையில் சிகிச்சையளித்து வந்ததாகவும் இன்று (26) அதிகாலை 04.30 மணி அளவில் அவருக்கு உடலில் நோவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ள தெரிவிக்கப்பட்டது.

சாய்ந்தமருது வைத்தியசாலையில் உயிரிழந்த நபர்: மரணத்தில் எழுந்த சந்தேகம்! | Person Died Sainthamaruthu Hospital Suspicion Died

இவ்வாறான நிலையில், மரணத்திற்கான காரணம் என்ன என்பதை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னரே அறிய முடியும் என்றும் மரணம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸாருக்கு மேலதிக நடவடிக்கைக்காக அறிவித்துள்ளதாகவும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று காலை காலமான 66 வயதுடைய கலந்தர்ஷா ஆதம்பாவா என்பவரின் குடும்பத்தினர் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் வைத்தியசாலை தரப்பினர் வெளியிடும் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும், சாய்ந்தமருது பொலிஸார் சந்தேகநபரின் தரப்பிடமிருந்து கையூட்டு பெற்றுக்கொண்டு ஒரு பக்கச்சார்பாக நடப்பதாகவும்,

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆதம்பாவாவிடமிருந்து வாய்மூல அறிக்கையை பெறுவதிலும் அவர்கள் கால இழுத்தடிப்பு செய்ததாகவும் இந்த மரண விசாரணை நியாயமாக நடைபெற்று குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஊடகங்களே இந்த விடயத்தை உரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

சாய்ந்தமருது பொலிஸ் நிலைய நீதிமன்ற உத்தியோகத்தர் எம்.எம்.எஸ்.முபாரக் (PC88489) துரிதமாக செயற்பட்டு குறித்த கலந்தர்ஷா ஆதம்பாவா என்பவரின் மரணம் கொலையா அல்லது இயற்கை மரணமா அல்லது நோயினால் ஏற்பட்ட மரணமா என்பதை கண்டறிய முன்னெடுத்த நடவடிக்கையின் பயனாக கல்முனை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஏ.ஆர்.எம்.கலீல் வைத்தியசாலைக்கு விஜயம் செய்து உடலை பார்வையிட்டதுடன் உடற்கூறு பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

இவ்வாறான நிலையில், உடற்கூறு பரிசோதனைக்காக ஜனாஸா அம்பாறை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பாக 20 வயதையுடைய சந்தேக நபரை இன்று சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மரணத்திற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எஸ். மோகனவர்ண தலைமையிலான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.