பரவ ஆரம்பிக்கும் அறியப்படாத புதிய நோய்: சிறுவர்களுக்கு அதிக பாதிப்பு.

பரவ ஆரம்பிக்கும் அறியப்படாத புதிய நோய்: சிறுவர்களுக்கு அதிக பாதிப்பு.

சீனாவில் கடந்த சில நாட்களாக அறியப்படாத புதிய நிமோனியா நோய் பரவி வருகிறதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெய்ஜிங், லியோனிங் மற்றும் பல நகரங்களில் உள்ள சிறுவர் மருத்துவமனைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வட சீனாவில் பரவி வரும் நோய் பற்றிய அனைத்து தகவல்களையும் வழங்குமாறு உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள சிறுவர்களிடையே பொதுவாக இந்த நோய் பரவி வருகிறதாகவும் அதனை சீன அதிகாரிகள் மூடி மறைப்பதாகவும் தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

பரவ ஆரம்பிக்கும் அறியப்படாத புதிய நோய்: சிறுவர்களுக்கு அதிக பாதிப்பு | New Disease Spreading In China அத்தோடு, 2019 ஆம் ஆண்டில், உலகின் முதல் கோவிட் நோயாளி சீனாவின் வுஹானில் இருந்து பதிவாகினார்.

மேலும், கோவிட் தொற்று உலகளாவிய தொற்றுநோயாக பரவியுள்ளது மற்றும் இறப்பு எண்ணிக்கை 70 லட்சத்தை நெருங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.