மீன் பிடிக்க சென்ற தந்தையும் மகனும்; ஒரே வீட்டில் இருவர் உயிரிழப்பு.

மீன் பிடிக்க சென்ற தந்தையும் மகனும்; ஒரே வீட்டில் இருவர் உயிரிழப்பு.

கல்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சியபலான்கமுவ ஆற்றில் மீன் பிடிக்க சென்ற தந்தையும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்கள் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய தந்தையும், 20 வயதுடைய மகனும் என கூறப்படுகின்றது.

மீன் பிடிக்க சென்ற தந்தையும் மகனும்; ஒரே வீட்டில் இருவர் உயிரிழப்பு | Father And Son Go Fishing Two People Diedமீன்பிடிக்கும் போது தந்தை ஆற்றில் மூழ்கியதாகவும், இதனையடுத்து அவரை காப்பாற்ற சென்ற மகனும் நீரில் மூழ்கிய நிலையில், இருவரும் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.