இத்தாலியில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: இலங்கைப் பிரஜை உயிரிழப்பு!
இத்தாலியின் வோகெரா ரயில் நிலையத்தின் நடைமேடையில் நின்று கொண்டிருந்த இலங்கையர் ஒருவர் சரக்கு ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வென்னப்புவ - பொரலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த நிரோஷன் பெர்னாண்டோ என்ற 46 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நிரோஷன் பெர்னாண்டோ புகையிரத நடைமேடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது அதிவேகமாக பயணித்த புகையிரதத்தின் வேகத்தினால் ஏற்பட்ட காற்றினால் தள்ளுப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
