மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் : தொடரும் சீரற்ற காலநிலையால் அதிகரிக்கும் மரணங்கள்!

மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் : தொடரும் சீரற்ற காலநிலையால் அதிகரிக்கும் மரணங்கள்!

மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக பாடசாலை மாணவர் ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

கல்பாத்த, வத்துகொடை பிரதேசத்தில் வசித்து வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவரே இவ்வாறாக உயிரிழந்துள்ளார்.

மின்னல் தாக்கிய போது குறித்த மாணவர் தனது வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்னல் தாக்கியதில் மாணவன் அதிர்ச்சியடைந்து நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் : தொடரும் சீரற்ற காலநிலையால் அதிகரிக்கும் மரணங்கள்! | 15 Year Old Dies After Being Struck By Lightningஎவ்வாறாயினும், மாணவன் உயிரிழந்துள்ள நிலையில், அவரது உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அங்குருவத்தோட்ட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.