மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: நாளை முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் அடுத்த கட்ட பணம்.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: நாளை முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் அடுத்த கட்ட பணம்.

அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவு நாளை முதல் பயனாளிகளின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் செப்டெம்பர் மாதத்திற்கான ரூ 8571 மில்லியன் கொடுப்பனவு அஸ்வெசும வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், 13 லட்சத்து 77,000 குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் செப்டெம்பர் மாதத்திற்கான கொடுப்பனவு நாளைமுதல் வங்கிக் கணக்குகளில் வரவுவைக்கப்படும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலனை செய்த பின், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூலை மாதம் முதல் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: நாளை முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் அடுத்த கட்ட பணம் | Aswesuma Allowance From Tomorrow