சவூதி அரேபியாவிற்கு சென்ற தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! நாடு திரும்பியதும் அம்பலப்படுத்திய உண்மைகள்.

சவூதி அரேபியாவிற்கு சென்ற தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! நாடு திரும்பியதும் அம்பலப்படுத்திய உண்மைகள்.

சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாக சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்த இராமசந்திரன் தர்ஷனி இன்று (22) நாட்டை வந்தடைந்தார்.

மத்துகம – நெபட பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான இராமசந்திரன் தர்ஷனியே இவ்வாறு நாட்டை வந்தடைந்தார்.

சவூதி அரேபியாவில் பணியாற்றிய வீட்டில் துன்புறுத்தல்களுக்கு இலக்கான நிலையில், இராமசந்திரன் தர்ஷனியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், சவூதி அரேபியாவிலிருந்து குவைட் வழியாக இன்று அதிகாலை இராமசந்திரன் தர்ஷனி நாட்டை வந்தடைந்தார்.

பல்வேறு இன்னல்களை அனுபவித்த தர்ஷனி தெரிவிக்கையில், “என்னை சலவை இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறைக்கு அழைத்து சென்று தாக்கினார்கள். கீழே தள்ளி என்னை தாக்கினார்கள்.

சவூதி அரேபியாவிற்கு சென்ற தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! நாடு திரும்பியதும் அம்பலப்படுத்திய உண்மைகள் | Work Visa Saudi Arabia Srilankan Girlஇரண்டு ஆணிகள் மற்றும் இரும்பு துண்டொன்றை கையில் கொடுத்து உட்கொள்ளுமாறு கூறினார்கள். இல்லையென்றால், தங்க நகைகளை திருடியதாக தெரிவித்து, காவல்துறையினரிடம் பிடித்து கொடுப்பதாக கூறினார்கள். நான் அணிகளை உட்கொண்டேன். ஒரு அணி தொண்டையில் சிக்கியது. எனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.” என தெரிவித்தார்.