பலவந்தமாக மது அருந்தக் கொடுத்து சிறுவன் துஸ்பிரயோகம்.

பலவந்தமாக மது அருந்தக் கொடுத்து சிறுவன் துஸ்பிரயோகம்.

பசறை, கோணக்கலையில் பலவந்தமாக மது அருந்தக் கொடுத்து 13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

  இடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனது வீட்டிற்கு அருகில் உள்ள வாகனம் திருத்தகத்தில் பணிபுரியும் சந்தேக நபர் கடைக்கு சென்று வீடு திரும்பிய சிறுவனை , அழைத்து பலவந்தமாக மது அருந்தக் கொடுத்து வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

பலவந்தமாக மது அருந்தக் கொடுத்து சிறுவன் துஸ்பிரயோகம் | Abuse Of Boy By Forcing Him To Drink Alcoholஇந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பசறை கோணக்கலை காவத்தை தோட்டத்தை சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நபர் விசாரணைகளின் பின்னர், பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது, சந்தேக நபரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.