மேலதிக வகுப்புக்களுக்கு இன்று முதல் தடை!

மேலதிக வகுப்புக்களுக்கு இன்று முதல் தடை!

ஊவா மாகாணத்தில் மேலதிக வகுப்புக்கள் இன்று புதன்கிழமை (22) முதல் தடை செய்யப்பட்டுள்ளன.

ஊவா மாகாண பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு கட்டணம் அறவிடப்படும் மேலதிக வகுப்புக்களே இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளது.

மேலதிக வகுப்புக்களுக்கு இன்று முதல் தடை! | Ban On Further Classes From Todayபாடசாலை நேரத்திற்கு மேலதிகமாக ஆசிரியர்களால் நடத்தப்படும் கட்டணம் அறவிடப்படுகின்ற மேலதிக வகுப்புகளுக்கே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தடை உத்தரவை பின்பற்றாத ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.