வானிலையில் தீடீர் மாற்றம்: கொட்டி தீர்க்க போகும் கனமழை..!

வானிலையில் தீடீர் மாற்றம்: கொட்டி தீர்க்க போகும் கனமழை..!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (20) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மி.மீ. 75 வரை கனமழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, தெதுரு ஓயா குளத்திற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலையில் தீடீர் மாற்றம்: கொட்டி தீர்க்க போகும் கனமழை..! | Today Weather Alertஇந்த எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் வசிப்பவர்களும், வீதிகளில் பயணிப்பவர்களும் இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.