புத்தளத்தில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு பேர்!

புத்தளத்தில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு பேர்!

நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக புத்தளத்தில் ஆறு பிதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 25 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் 584 குடும்பங்களைச் சேர்ந்த 2265 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், வெள்ள அனர்த்தம் காரணமாக இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் எனவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு குறிப்பிட்டுள்ளது.

புத்தளத்தில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு பேர்! | Two People Died Due To Rain In Puttalamஇதேவேளை, நாத்தாண்டிய மற்றும் முந்தல் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் தலா ஒவ்வொரு மரணம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளம் காரணமாக முந்தல் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் 4 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.