உலகக்கோப்பை முடிந்த உடன் ஓய்வை அறிவிக்கப் போகும் இந்திய வீரர்!

உலகக்கோப்பை முடிந்த உடன் ஓய்வை அறிவிக்கப் போகும் இந்திய வீரர்!

இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் அஸ்வின் உலகக்கோப்பை இறுதிப் போட்டி முடிந்த உடன் ஓய்வை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய டெஸ்ட் அணியில் அவர் முதன்மை சுழல்பந்து வீச்சாளராக உள்ள அஸ்வினுக்கு தற்போது 37 வயது ஆகிறது.

ஒருநாள் போட்டிகளில் நீண்ட காலமாக இடம் பெறாத அஸ்வின், திடீரென உலகக்கோப்பை தொடருக்கு முன் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார்.

உலகக்கோப்பை தொடரில் இந்தியா ஆடிய முதல் போட்டியில் மட்டுமே அஸ்வின் ஆடினார். அதன்பின் அவர் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

உலகக்கோப்பை தொடர் முடிந்த பின் அஸ்வினுக்கு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்காது. அவர் டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெறுவார்.

உலகக்கோப்பை முடிந்த உடன் ஓய்வை அறிவிக்கப் போகும் இந்திய வீரர்! | India Vs Australia Final Live Cricket Record Ashwi

இந்த நிலையில், உலகக்கோப்பையின் துவக்கத்தில் அஸ்வின் பேட்டி அளித்த போது இதுவே தனது கடைசி உலகக்கோப்பை எனக் கூறி இருந்தார். 

அப்போதே உலகக்கோப்பை முடிந்த உடன் அஸ்வின் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்ததுள்ளது.