![](https://yarlosai.com/storage/app/news/79d6bff589f8b9e937e6311247651f69.jpeg)
இந்தியா -அவுஸ்திரேலியா இறுதிப்போட்டியால் பல மடங்கு அதிகரித்த கட்டணங்கள்..!
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ள நிலையில் போட்டியை பார்வையிட செல்லும் விமான டிக்கெட்டின் விலை படுவேகத்தில் உயர்ந்துள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை(19) அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில், மும்பையில் இருந்து அகமதாபாத் செல்ல விமான கட்டணம் 5,000 ரூபாவாக இருந்த நிலையில் தற்போது 32,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
மேலும், விடுதி அறைக்கான கட்டணம் தற்போது 100,000 ரூபா என கூறப்படுகிறது.
அகமதாபாத் நகரில் அமைந்துள்ள ITC Narmada விடுதியில் கிரிக்கெட் காரணமாக ஒரு நாள் இரவுக்கு ரூ 236,000 வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
Hyatt Regency விடுதியில் ரூ 238,360 வசூலிக்கப்படுகிறது. விடுதிகளின் கட்டணம் 20 மடங்கால் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் போது, பல ரசிகர்கள் மருத்துவமனைகளில் இரவு தங்குவதற்காக முழு உடல் பரிசோதனைக்கான கட்டணம் செலுத்தி, தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி 5 முறை சேம்பியனான அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறமை குறிப்பிடத்தக்கது.