ஆசிரியர் எனும் போர்வையில் பணமோசடி! மக்களே அவதானம்.

ஆசிரியர் எனும் போர்வையில் பணமோசடி! மக்களே அவதானம்.

கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆசிரியர் எனும் போர்வையில் பண மோசடி செய்த சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கிராந்துருகோட்டை பிரதேசத்தை சேர்ந்த 25 ,37 வயதுடையவர்கள்  எனவும் பொலிஸார்  கூறியுள்ளனர்.

ஆசிரியர் எனும் போர்வையில் பணமோசடி! மக்களே அவதானம் | Money Laundering In The Guise Of Being A Teacherசந்தேக நபர் பல்வேறு பிரதேசங்களில் தங்களை ஆசிரியர்கள் என கூறி பாடசாலை மாணவர்களின் பொற்றோர்களிடம் , பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி சிகிச்சைக்காக பணத்தை தமது வங்கி கணக்கில் வைப்பு செய்யுமாறு கோரி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு சுமார் 25 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

எனவே இவ்வாறான போலி தொலைபேசி அழைப்பு தொடர்பாக அவதானமாக இருக்குமாறு தெரிவித்த பொலிஸார், இவ்வாறான அழைப்புகளில் சிக்கினால் உடனடியாக தகவல் வழங்குமாறும் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.