யாழில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் உயிரிழப்பு.

யாழில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் உயிரிழப்பு.

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் மயக்கமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கைதடி மத்தி, கைதடியைச் சேர்ந்த 55 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான அருச்சுணன் சுந்தரலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் உயிரிழப்பு | Family Dies After Being Bitten By A Snake In Yaliகுறித்த நபர் கடந்த 31 ஆம் திகதி மாலை மனைவியுடன் தோட்டத்தில் களை பிடுங்கியதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்போது இரத்தப்புடையன் பாம்பு அவரை கையில் தீண்டியதை அடுத்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் மயக்கம் அடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (16) உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணையினை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்றையதினம் (17) உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.