இலங்கையில் பதறவைத்த சம்பவம்; ஈவிரக்கமற்றவர்களின் கொடூர செயல்.

இலங்கையில் பதறவைத்த சம்பவம்; ஈவிரக்கமற்றவர்களின் கொடூர செயல்.

வெல்லவாய – தெல்லுல்ல பகுதியில் உள்ள கிரிந்திஓயாவில் யானையொன்றை கொலைசெய்து அதன் தலை மற்றும் தும்பிக்கையை துண்டுதுண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யானையொன்றை கொலைசெய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியுள்ள நிலையில், யானையின் தலை மாத்திரம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

srilanka elephantயானையின் தலையுடன் ஒரு காது மாத்திரம் காணப்படுவதுடன் மற்றைய காது துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த யானை வேறொரு பிரதேசத்தில் சுட்டுக் கொல்லப்பட்டு, கிரிந்திஓயாவில் போடப்பட்டிருக்கலாமென பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.

srilanka elephant

இதுவரை யானையின் தும்பிக்கை துண்டிக்கப்பட்ட தலை மாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய பாகங்களை கண்டுபிடிக்க வெல்லவாய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈவிரக்கமின்றி வாயில்லா ஜீவனை கொன்றவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளது.srilanka elephantஅதோடு உலகில் அதிகம் யானைகள் வாழும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.  இவ்வாறான நிலையில்  இவ்வாறு யானை ஒன்று கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் மக்கள் மனங்களில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.