மிகமோசமாக விளையாடியமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அணி!

மிகமோசமாக விளையாடியமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அணி!

2023 ஆம் ஆண்டுக்கான உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் மோசமாக விளையாடியமைக்காக இலங்கை அணி பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் இன்றையதினம் (12-11-2023) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அணித்தலைவர் குசல் மென்டிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

மிகமோசமாக விளையாடியமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோரிய இலங்கை அணி! | Sri Lankan Cricket Team Apologized Playing Badly

மேலும், 2023 உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் எந்த தரப்பும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஐசிசி தடை விரைவில் நீக்கப்பட்டு, எங்கள் அணி விளையாட அனுமதிக்கப்படும் என நம்புகிறோம் என குறித்த சந்திப்பில் மஹேல ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.