இளம் யுவதியின் கழுத்தை வெட்டி கொலை செய்த காதலன்: தென்னிலங்கையில் நடந்த கொடூரம்

இளம் யுவதியின் கழுத்தை வெட்டி கொலை செய்த காதலன்: தென்னிலங்கையில் நடந்த கொடூரம்

கொழும்பு ஹோமாகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதியின் கழுத்தை வெட்டி படுகொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தெஹிவளை எண்டர்ன் வீதி பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய அச்சினி துஷாரி என்ற யுவதியே இன்று காலை கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் யுவதியின் கழுத்தை வெட்டி கொலை செய்த காதலன்: தென்னிலங்கையில் நடந்த கொடூரம் | Death Police Investigating Srilanka

இதுவரை நடந்த விசாரணையில் காதல் உறவின் அடிப்படையில் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் காவல்துறையினர் பாதுகாப்பில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளனர்.