குளித்துக் கொண்டிருந்தவரை சுட்டுக் கொலை செய்த மர்ம நபர்கள்..

குளித்துக் கொண்டிருந்தவரை சுட்டுக் கொலை செய்த மர்ம நபர்கள்..!

அம்பாறை, பண்டாரதுவ, மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 குறித்த நபர் வீட்டின் பின்னால் குளித்துக் கொண்டிருந்ததாகவும் திடீரென வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நெல் நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் 42 வயதுடைய வெரன்கெட்டகொட, மாயதுன்ன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

குளித்துக் கொண்டிருந்தவரை சுட்டுக் கொலை செய்த மர்ம நபர்கள் | Somene Shoots Death In Amparai

இந்தக் குற்றத்தைச் செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அத்துடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பண்டாரதுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.