போலி நாணயத்தாள் மோசடி: தலைமறைவான பெண்..!

போலி நாணயத்தாள் மோசடி: தலைமறைவான பெண்..!

போலி நாணயத்தாள் தொடர்பான வழக்கில் பொய்யான தகவல்களை வழங்கி தலைமறைவான மேற்படி பெண் தொடர்பில் அறிந்தவர்கள் தகவல் வழங்குமாறு பொழிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

மேற்படி வழக்கில் உயர்நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலையாகுவதை தவிர்த்து குறித்த பெண் தலைமறைவானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பே சிமிகொட பிரதேசத்தில் (தேசிய அடையாள அட்டை இலக்கம் 696641439) வசிக்கும் கும்பலாத்தர ஆராச்சிகே கீதானி தம்மிகா என்ற 54 வயதுடைய சந்தேக நபர், ஸ்ரீயலதா சில்வா என்ற போலியான பெயரில் 211 கத்ததர நாகொட வீதியில் (தேசிய அடையாள அட்டை இலக்கம் 718262925) வசிப்பதாக பொலிஸாருக்கு பொய்யான தகவலை வழங்கியுள்ளார்.

போலி நாணயத்தாள் மோசடி: தலைமறைவான பெண் | Fake Currency Fraud Police Seeking Public Help

தகவல் தெரிந்தவர்கள் மேற்படி புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், போலி நாணயப் பணியகத்தின் பொது தொலைபேசி இலக்கமான 0112-326670 க்கு அல்லது 0718-594901தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.