மதுபோதையில் நள்ளிரவில் பொலிஸாரை தாக்கிய பெண்கள்!

மதுபோதையில் நள்ளிரவில் பொலிஸாரை தாக்கிய பெண்கள்!

காரை நிறுத்தி மது அருந்திய  இரு பெண்களால் தாக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம்    கிரிகோரி வீதிக்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (05) நள்ளிரவு 12.00 மணியளவில் இடம்பெற்றதாக  தெரிவிக்கப்படுகின்றது.

மதுபோதையில் நள்ளிரவில் பொலிஸாரை தாக்கிய பெண்கள்! | Drunken Women Attacked The Police Midnightகாயமடைந்த கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் இருவரும் அதிக போதை காரணமாக பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கியுள்ளதாகவும் சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் நள்ளிரவில் பொலிஸாரை தாக்கிய பெண்கள்! | Drunken Women Attacked The Police Midnight

சம்பத்தில் கொழும்பு 13 மற்றும் கொழும்பு 14 ஆகிய இடங்களில் வசிக்கும் 30 மற்றும் 43 வயதுடைய இரண்டு பெண்களே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாநகர போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள், மேலும் பல பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட பின்னர் , மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த வேளையிலேயே பெண்களின் தாக்குதலும்மு இலக்கானதாக  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.