பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிவிப்பு..!

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிவிப்பு..!

2024ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.எனவே 2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 22ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிவிப்பு | School Holidays In Sri Lanka

அத்துடன் பெப்ரவரி மாதம் 2ஆம் (02.02.2024) திகதி மீளவும் பாடசாலைகள் கல்வி செயற்பாட்டிற்காக ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் முன்னதாக கூறியிருந்தார். 

இந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.