தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் அசத்தும் இலங்கைச் சிறுமிகளுக்கு யாழ் வர்த்தகர்களின் நெகிழ்ச்சி செயல்!

தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் அசத்தும் இலங்கைச் சிறுமிகளுக்கு யாழ் வர்த்தகர்களின் நெகிழ்ச்சி செயல்!

தென்னிந்தியாவில் ஒளிபரப்பாகும் பிரபல இசை நிகழ்ச்சி ஒன்றில் இலங்கையிலிருந்து கலந்துகொண்டு அசானி மற்றும் கில்மிசா  தங்களது அசத்தலான திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் தியாகி அறக்கொடை நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவர் தியாகேந்திரன் வாமதேவா பணப்பரிசில்களை நேரிலே சென்று வழங்கினார்.

தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் அசத்தும் இலங்கைச் சிறுமிகளுக்கு யாழ் வர்த்தகர்களின் நெகிழ்ச்சி செயல்! | Saregamapa Music Show Sri Lankan Girls Jaffna

சமீபத்தில் இடம்பெற்ற சரிகமப இசை நிகழ்ச்சியிலேயே குறித்த பணத்தொகை இருவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்படி இலங்கை ரூபாவின் படி அசானிக்கு 10 இலட்சமும் கில்மிஷாவுக்கு 5 இலட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சில போட்டியாளர்களுக்கும் இதன் போது பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அசானி மலையகத்தை சேர்ந்தவர் என்பதுடன் கில்மிஷா யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதுடன் சீ தமிழின் சரிகமப இசை நிகழ்ச்சி பலரது மனங்களையும் வென்ற பாடகர்களாக மாறியமை குறிப்பிடத்தக்கது.