60 மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த பாடசாலை அதிபருக்கு நேர்ந்த கதி!

60 மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த பாடசாலை அதிபருக்கு நேர்ந்த கதி!

செய்முறை தேர்வில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி பாடசாலை முதல்வர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த் மாவட்டத்தில் அரசு பாடசாலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

60 மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த பாடசாலை அதிபருக்கு நேர்ந்த கதி! | School Principal Arrested Abuse Female Studentsஇந்த நிலையில் பாடசாலையில் 60 மாணவிகளை மிரட்டி பாலியல் அத்துமீறல் செய்து தலைமறைவாக இருந்த அப்பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

செய்முறைத் தேர்வுகளில் தோல்வியடைய வைப்பதாக மிரட்டி, பாடசாலை முதல்வர் பாலியல் தொல்லை கொடுத்ததாக, 15 மாணவிகள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோருக்கு 5 பக்க கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து கடந்த மாதம் 31-ஆம் திகதி குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போக்சோ மற்றும் ஐபிசி 354-வது பிரிவின் கீழ் உச்சனா பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். 

60 மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த பாடசாலை அதிபருக்கு நேர்ந்த கதி! | School Principal Arrested Abuse Female Students

கடந்த ஐந்து நாட்களாக தலைமறைவாக இருந்த குற்றம் சாட்டப்பட்ட பாடசாலை முதல்வர், தற்போது டிஎஸ்பி அமித் பாட்டியா தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.