14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞர்!

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞர்!

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்தின் பேரில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் நுரைச்சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் புத்தளம் நுரைச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் நுரைச்சோலை அங்குடாவ பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஆவார். 

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞர்! | 18 Old Youth Made A 14 Year Old Girl Pregnantஅண்மையில் புத்தளம் வைத்தியசாலையில் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி சிறுமியை திருமணம் செய்த நிலையில் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்துவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞர்! | 18 Old Youth Made A 14 Year Old Girl Pregnantகைததான சந்தேக நபர் தங்களது திருமண சான்றிதழ் மற்றும் சிறுமியின் பிறப்பு சான்றிதழ் முதலியவற்றை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.