பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 9 பேர் அதிரடி கைது! சிக்கிய மர்ம பொருள்.

பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 9 பேர் அதிரடி கைது! சிக்கிய மர்ம பொருள்.

ஹக்மன, தெனகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தலில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட ஒன்பது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹக்மன பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 9 பேர் அதிரடி கைது! சிக்கிய மர்ம பொருள் | Police Officer Including 9 Suspects Arrest Heroin

மேலும், இந்த போதைப்பொருள் கடத்தலின் போது 6 கிராம் மற்றும் 470 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஒருவர் இன்றைய தினம் (03-11-2023) காலை கைது செய்யப்பட்டதோடு, விசாரணைகளின் போது அவர் வெளிப்படுத்திய தகவலின் பேரில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் வீட்டை சோதனை நடாத்தியதில், 3 கிராம் மற்றும் 150 மில்லி கிராம் ஹெரோயின் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 9 பேர் அதிரடி கைது! சிக்கிய மர்ம பொருள் | Police Officer Including 9 Suspects Arrest Heroin

பின்னர், மற்ற ஏழு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 18 மற்றும் 38 வயதுடைய தெனகம, ஹக்மன, கதிர்காமம் மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 9 பேர் அதிரடி கைது! சிக்கிய மர்ம பொருள் | Police Officer Including 9 Suspects Arrest Heroin

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் தெய்யந்தரை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் 9 பேரும் நாளை (நவம்பர் 04) தெய்யந்தரை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.