வெளிநாட்டில் தாய் - இலங்கையில் மகளின் விபரீத முடிவு..!

வெளிநாட்டில் தாய் - இலங்கையில் மகளின் விபரீத முடிவு..!

தலவாக்கலை பிரதேசத்தில் தந்தை அடித்ததால் மனமுடைந்த சிறுமி உயிரை மாய்த்துள்ளமை தெரிய வந்துள்ளது. 

வட்டகொடை தோட்டத்தின் மேல் பகுதியில் வசித்து வந்த ஜீவராஜன் ரதிபிரியா என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த சிறுமியின் தாய் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளார். இந்த நிலையில், தந்தையின் தாக்குதலால் மனமுடைந்த சிறுமி சேலையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளில் குறித்த விடயங்கள் தெரியவந்துள்ளன.

வெளிநாட்டில் தாய் - இலங்கையில் மகளின் விபரீத முடிவு | Girl Take Bad Decision

இந்நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு நீதவானின் பரிசோதனையின் பின்னர் அனுப்பி வைக்கப்படவுள்ளது.