சட்டவிரோத செயலில் ஈடுப்பட்ட நால்வர் கைது..!

சட்டவிரோத செயலில் ஈடுப்பட்ட நால்வர் கைது..!

பறள் சட்டவிரோத வடி சாராயத்துடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த  சம்பவமானது கதிரவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

வெலிகந்த தலைமையக இராணுவப் புலனாய்வுப்பிரிவிற்கு பொதுமக்கள் வழங்கிய இரகசியத்தகவலுக்கமைய வெலிகந்த இராணுவ முகாம் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே இந்நால்வரும் வாகரை காவல்துறை பிரிவிற்குட்பட்ட கதிரவெளி ஆற்றங்கரைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோத செயலில் ஈடுப்பட்ட நால்வர் கைது | Four Persons Arrested In Katiraveli

கைது செய்யப்பட்டவர்களிடம் 4 பறள் வடி சட்ட விரோத வடி சாராயம் மற்றும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் சான்றுப்பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வாகரை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சட்டவிரோத செயலில் ஈடுப்பட்ட நால்வர் கைது | Four Persons Arrested In Katiraveli