இன்றைய தினத்துக்கான வானிலை அறிக்கை

இன்றைய தினத்துக்கான வானிலை அறிக்கை

நாடளாவிய ரீதியில் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

கிழக்கு ,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

இன்றைய தினத்துக்கான வானிலை அறிக்கை | Today Weather Conditionஅத்தோடு பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பாடு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

திருகோணமலை தொடக்கம் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லதுஇடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இன்றைய தினத்துக்கான வானிலை அறிக்கை | Today Weather Conditionநாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலயத்திற்கு 20-25 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையிலிருந்து காற்று வீசக்கூடும்.

அத்தோடு பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் எனவும் அதரிவிக்கப்பட்டுள்ளது.