அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: ஒரு வருடத்தில் நாட்டில் ஏற்பட்ட மாற்றம்

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: ஒரு வருடத்தில் நாட்டில் ஏற்பட்ட மாற்றம்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட சிரமப்பட்ட இந்த நாட்டில் சம்பளம் அதிகரிக்கப்படும் என்ற விடயம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சரியான தலைமைத்துவத்தின் கீழ் நாடு நல்ல பொருளாதாரத் திசையில் பயணிக்கிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம், அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை தவணை முறையில் வழங்குதல், உரிய திகதியை தாமதப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் பின்பற்ற வேண்டியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: ஒரு வருடத்தில் நாட்டில் ஏற்பட்ட மாற்றம் | Government Employee Government Staff Salary Increa

எவ்வாறாயினும், எவ்வாறு சம்பளம் வழங்குவது என்பது பற்றி அல்ல, ஆனால் எவ்வளவு சம்பளம் அதிகரிக்கப்படும் என்பது குறித்து விவாதம் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இக்கட்டான பொருளாதாரத்தில் சென்று கொண்டிருக்கும் நாட்டுக்காக, அதிகரிக்கப்பட்ட சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும் என அமைச்சர் தெரிவித்தார்.