சட்டவிரோதமான முறையில் மின்சார வேலி: பரிதாபமாக உயிரிழந்த யானைகள்..!

சட்டவிரோதமான முறையில் மின்சார வேலி: பரிதாபமாக உயிரிழந்த யானைகள்..!

ஹம்பேகமுவ, புருதகொல்ல பிரதேசத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றையதினம்(30) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவலாளியாக வேலை செய்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் காட்டு யானைகளை விரட்டுவதற்காக சொத்துக்களை சுற்றி சட்டவிரோதமாக மின்சார வேலியை அமைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் மின்சார வேலி: பரிதாபமாக உயிரிழந்த யானைகள் | Man Arrested Over Deaths Of Two Wild Elephants

விவசாய நிலத்துக்குள் புகுந்த இரண்டு யானைகள் வேலியில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் உயிரிழந்த யானைகளுக்கு 25 மற்றும் 15 வயது இருக்கும் என கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கல்தோட்டை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சட்டவிரோதமான முறையில் மின்சார வேலியை அமைத்த நபரை கைதுசெய்துள்ளனர்.