உறங்கிக்கொண்டிருந்த யாசகரை பெட்ரோல் ஊற்றி தீமூட்டி எரித்த நபர்

உறங்கிக்கொண்டிருந்த யாசகரை பெட்ரோல் ஊற்றி தீமூட்டி எரித்த நபர்

ஹோமகமவில் உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீது பெட்ரோலை ஊற்றி தீமூட்டி கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீதே சந்தேகநபர் இவ்வாறு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த அந்த பிச்சைக்காரன் அந்த ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில் “நீ குளிக்கமாட்டீர் இல்லையா? குளிக்காவிட்டால் தீ வைப்பேன்” என பலமுறை அந்த சந்தேநபர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அவர் ஞாயிற்றுக்கிழமை (29) இரவு பெட்ரோலை ஊற்றி கொளுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உறங்கிக்கொண்டிருந்த யாசகரை பெட்ரோல் ஊற்றி தீமூட்டி எரித்த நபர் | Person Yasaka With Petrol And Set Him On Fireவிபரீதத்தை கண்டவர்கள், யாசகரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அவ்வாறு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர் திங்கட்கிழமை (30) காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

64 வயதான தர்மதாஸ என்பவரே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகத்தின் பேரில் 27 வயதான நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.