திருமண வைபவத்தில் கலந்துகொண்ட இளம் பெண் திடீர் மரணம்!

திருமண வைபவத்தில் கலந்துகொண்ட இளம் பெண் திடீர் மரணம்!

புத்தளம் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட யுவதி திடீர் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளார்.

குறித்த திருமண நிகழ்வில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்ட போது அவருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த யுவதி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனமடுவ நகரைச் சேர்ந்த 20 வயதுடைய எச்.எம் அயோத்தி தேஷானி விஜேவர்தன என்பவரே உயிரிழந்துள்ளார்.

திருமண வைபவத்தில் கலந்துகொண்ட இளம் பெண் திடீர் மரணம்! | Young Women Death In Wedding Function

யுவதியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை புத்தளம் ஆதார வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி குலேந்திர பிரேமதாச மேற்கொண்டார்.

மரணம் தொடர்பான மேலதிக பரிசோதனைகளுக்காக உடல் உறுப்புகளை அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.