கொலை வழக்கொன்றில் தமிழர் பகுதியில் மூவர் கைது..!

கொலை வழக்கொன்றில் தமிழர் பகுதியில் மூவர் கைது..!

கொலை வழக்கொன்றில் தேடப்பட்டு வந்தஇளம்பெண் உள்பட 3 பேர் கிளிநொச்சி - இராமநாதபுரம் மாயனூர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கடந்த 25ஆம் திகதி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை தடியால் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பான விசாரணையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இராமநாதபுரம் காவல்துறையினர் முன்னெடுத்துவந்த விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தலைமையகம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் 16 மற்றும் 17 வயதுடையவர்கள் எனவும் பெண் சந்தேகநபர் 18 வயதுடையவர் எனவும் அவர்கள் மாயனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொலை வழக்கொன்றில் தமிழர் பகுதியில் மூவர் கைது..! | Kilinochi Young Woman Wanted In A Murder Case

அத்தோடு, ஆரம்பகட்ட விசாரணைகளில் காதல் உறவின் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.