இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியானது திறைசேரி உண்டியல்கள் குறித்து முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அவ்வகையில், ஒரு லட்சத்து 45 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு! | Notification Of Central Bank Of Sri Lanka