நல்லத்தண்ணி பகுதியில் மாயமான 3 மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

நல்லத்தண்ணி பகுதியில் மாயமான 3 மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லத்தண்ணி -  லக்சபான தோட்டம், எமில்டன் பிரிவில் இருந்து காணாமல்போன 3 மாணவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை நல்லத்தண்ணி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரக்காடு கிராமத்தில் இன்றைய தினம் (27-10-2023) மாலை 7 மணிக்கு அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

நல்லத்தண்ணி பகுதியில் மாயமான 3 மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! | 3 Missing Students Found In Nallathanni Ratnapura

கண்டுபிடிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளனர். அதன்பின்னர் பெற்றோர்களிடம் கையளிக்கப்படுவார்கள்.

பாடசாலை மாணவர்கள் மூன்று பேரும் நேற்றைய தினம் (26-12-2023) முதல் காணாமல் போயுள்ளனர் என நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்லத்தண்ணி பகுதியில் மாயமான 3 மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! | 3 Missing Students Found In Nallathanni Ratnapura

15 வயதான நடராஜா நிலூக்‌ஷன்,  13 வயதான யோகராஜன் திவாகர்,  14 வயதான ராஜா சன்தூர் ஆகிய மாணவர்களே இவ்வாறு காணாமல்போயிருந்தனர்.

இதனையடுத்து பொலிஸார் தேடுதல் வேட்டையில் இங்கினர்.

இந்த நிலையில் மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸ் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.