வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்படவிருந்த பேரிழப்பு , தடுத்து நிறுத்திய மாணவர்கள்

வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்படவிருந்த பேரிழப்பு , தடுத்து நிறுத்திய மாணவர்கள்

சிகிரியாவை பார்த்துவிட்டு திரும்பிய வெளிநாட்டு பெண்ணான சுற்றுலாதாரியின் பணப்பையை இருவர் அபகரித்து சென்ற நிலையில் மாணவர்கள் இருவரின் சமயோசித புத்தியினால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துருக்கி நாட்டைச் சேர்ந்த 22 வயதான சுற்றுலாதாரியான பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டது.

நேற்று காலை(26) சிகிரியாவை பார்வையிட்டபின்னர் குறித்த பெண் தான் தங்கியிருக்கும் விடுதியை நோக்கி நடந்து சென்றுள்ளார்.இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் குறித்த பெண்ணை தாக்கி அவரிடமிருந்து பணப்பையை அபகரித்து சென்றுள்ளனர்.

வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்படவிருந்த பேரிழப்பு :தடுத்து நிறுத்திய மாணவர்கள் | Turkish Womans Purse Robbed In Sigiriyaஇவ்வாறு பணப்பையை அபகரித்த நிலையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள் சென்றவேளை வீதியின் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்த 12 மற்றும் 13 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் அவதானித்து மோட்டார் சை்கிளின் இலக்கத்தை மனப்பாடம் செய்து வைத்துள்ளனர்.

பின்னர் வீட்டுக்கு சென்ற மாணவர்கள் இருவரும் குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு பெண்ணுக்கு ஏற்படவிருந்த பேரிழப்பு :தடுத்து நிறுத்திய மாணவர்கள் | Turkish Womans Purse Robbed In Sigiriya

சிறிது நேரத்தின் பின்னர் வெளிநாட்டு பெண்ணின் பணப்பை திருடப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல அவ்விடத்தில் பரவவே மாணவர்கள் இருவரும் பெற்றோரின் உதவியுடன் வெளிநாட்டு யுவதி தங்கியிருந்த விடுத்திக்கு சென்று குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை வழங்கியுள்ளனர். உடனடியாக இது தொடர்பில் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பணப்பையை கொள்ளையடித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.