இன்றைய தினத்துக்கான வானிலை அறிக்கை

இன்றைய தினத்துக்கான வானிலை அறிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று (27.10.2023) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினத்துக்கான வானிலை அறிக்கை | Today Weather Condition

இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.