திருகோணமலையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இளைஞன்

திருகோணமலையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இளைஞன்

திருகோணமலை - பூநகர் பகுதியில் இன்று (26.10.2023) பிற்பகல் வேளையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் சிக்கியவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் விழாவெட்டுவான் -நாகக்காடு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இளைஞன் | A Man Death By Accident At Trincomleeமட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி தனியாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த கம்பம் ஒன்றில் மோதுண்டதில் சம்பவம் இடத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருகோணமலையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இளைஞன் | A Man Death By Accident At Trincomlee

உயிரிழந்த நபரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலையில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இளைஞன் | A Man Death By Accident At Trincomlee