கை,கால்கள் கட்டப்பட்டு காவலாளி கொலை; பெண்னுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கை,கால்கள் கட்டப்பட்டு காவலாளி கொலை; பெண்னுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கலேவல - குருணாகல் பிரதான வீதியின் பெலிகம பிரதேசத்தில் உள்ள பண்ணை ஒன்றில்  காவலாளியின் கை, கால்களையும் வாயையும் கட்டி படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் கொல்லப்பட்டவர் 52 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனத் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் , 

கை,கால்கள் கட்டப்பட்டு காவலாளி கொலை; பெண்னுக்கு காத்திருந்த அதிர்ச்சி | The Guard Was Killed With His Hands And Feet Tiedநேற்றையதினம் புதன்கிழமை (25) இரவு பால் விற்பனை நிலையத்துக்குள் புகுந்த குழுவினர் அங்கிருந்த பொருட்கள் சிலவற்றையும் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 இன்று வியாழக்கிழமை (26) காலை குறித்த காவலாளிக்கு உணவு கொண்டு சென்ற பெண் ஒருவர் சடலத்தைக் கண்டு அதிச்சியடைந்து, அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த பால் விற்பனை நிலையம் இதற்கு முன்னரும் மூன்று தடவைகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்  இரவுநேர காவலாளி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.