இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு

நாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் வரை பலத்த மழையும் பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவிப்பு | Today Weather Condition In Sri Lankaமத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.