இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கி ஒரு லட்சத்து 35 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், இன்றைய தினம் (25.10.2023) ஏல விற்பனையின் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 60 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையின் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல் | Announcement Issued By Central Bank Of Sri Lanka